5 ரூபாய்க்கு அறுசுவை உணவு.. தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்து இருந்தார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாகி உள்ளார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை எல்லாம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : கவர்னர் தேநீர் விருந்து : தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!
அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அண்ணா கேண்டின்கள் திறக்கப்படும் என அவர் வாக்குறுதி அறிவித்திருந்ததை சந்திரபாபு நாயுடு நிறைவேற்றியுள்ளார்.
அதன்படி, இன்று (15.08.24) ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டுள்ளது.
அண்ணா கேண்டீனில் தினமும் காலை, மதியம், இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
இங்கு தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு தரம் மற்றும் சுவையாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.