Site icon ITamilTv

5 மாநில தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல்” – தேர்தல் ஆணையரின் புதிய அறிவிப்பு..!

Spread the love

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநில தேர்தலில் வேட்புமனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதில் உத்தரபிரதேசத்தில் தேர்தல் முதற்கட்டமாக பிப்ரவரி 10 ஆம் தேதியும், 2 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 14 நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும், 3-ம் கட்ட தேர்தல் பிப்.20 ஆம் தேதியும்,4-ஆம் கட்ட தேர்தல் பிப் 23 ஆம் தேதியும் , 5ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும், 6ம் கட்ட தேர்தல் மார்ச் 3 ஆம் தேதியும், இறுதிகட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

மேலும்,மணிப்பூரில் பிப் 27-ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3-ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம்,  இந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநில தேர்தலில் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..


Spread the love
Exit mobile version