தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் அரசுமற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் 1சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம்கள் நடத்த வேண்டும், மாதாந்திர உதவித்தொகை 3ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், அரசு அலுவலகங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர்களை பணியமர்த்த வேண்டும், வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அதுதொடர்பான பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, விசில் ஊதி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்