பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழக அரசு துறை வாரியாக பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மாணவர்களின் நலன் காக்க விரும்பியும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மாணவர்களின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கான இந்த நிதி உதவியை பெற, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.