‘ஹர் கர் திரங்கா’ திட்டத்தின் மூலம் கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் குடிமக்கள் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்ற வேண்டும் என்றும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களின் சமூக ஊடக காட்சிப் படங்களை மாற்றவும் வலியுறுத்தினார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முன்னணி சிவாலயம் ஸ்ரீ காலஹஸ்தி கோயில். ராகு,கேது தோஷ பரிகாரங்களுக்கு புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்கும் காளஹஸ்தி. இந்த கோவில் உள்ள கோபுரம் ஒன்றிற்கு மூவர்ண கொடி போர்த்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திர தின அமுதப் பெருவிழா என்று மத்திய அரசு கொண்டாடிவருகிறது.இந்த நிலையில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டில் பல்வேறு பாகங்களிலும் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள் ஆகிய அனைத்திலும் இன்று காலை தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காளஹஸ்தி கோவில் கோபுரத்தின் மீதும் மூன்று தேசிய கொடிகளை ஏற்றிய கோவில் நிர்வாகம் கோபுரத்தின் மீது மூவர்ண கொடியை போர்த்தி அலங்கரித்துள்ளது.
கலாச்சார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் அடிப்படையில், மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.ஆனால் இது போன்று மூவர்ண கோடியை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கோவில் அறக்காவலர் கோவில் நிர்வாகம் தரப்பில் நாடு மக்கள் எந்தவித பேதமும் இன்றி கொண்டாடும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.