தமிழகத்தில் 8,050 வாக்குச் சாவடிகள் (polling ) பதற்றமானவை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது :
தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
ரோடு ஷோ நிகழ்ச்சிகளை, நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு உள்ளது.
Also Read : https://itamiltv.com/the-shooting-video-of-the-movie-vidamuyarchi-is-going-viral-on-internet/
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில், சிசிடிவி கேமிரா கண்காணிப்பு (polling) அதிகப்படுத்துவது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு , துணை ராணுவம் பாதுகாப்பு ஆகியவற்றை அதிகப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.