இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து ரசித்த ‘96’ Movie . காதலர் தினத்தன்று மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அன்றும் இன்றும் என்றும் எவர் க்ரீன் படமாக வலம் வருகிறது.
ப்ரேம்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க த்ரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார் .
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் இசை மிக பெரிய பிளஸ் ஆக உள்ளது . பள்ளிக் காதலையும், கல்லூரி நினைவுகளையும் ஒவ்வருவர் மனதிலும் நினைவு படைத்தும் இப்படத்தை கொண்டாடாத ஆட்களே கிடையாது .
இந்நிலையில், 96 Movie காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காதலுக்கு பெயர்போன ’ரோமியோ ஜூலியட்’, ‘ரோமன் ஹாலிடே’, ‘டைட்டானிக்’, ‘திவாலே துல்ஹன் லே ஜெயங்கே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற பல சூப்பர் ஹிட் காதல் திரைப்படங்கள் வரிசையில் தற்போது 96 திரைப்படமும் அமைத்துள்ளது ,
அனைவரின் இதயங்களிலும் என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் இப்படத்தி வரும் காதலர் தினத்தன்று வெளியிட முடிவு செய்திருப்பது அனைவர்க்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியதாவது :
96 திரைப்படம் வெறும் கிளாசிக் மட்டுமில்லை. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று. நாங்கள் இந்தப் படத்தைத் தயாரித்தபோது, பார்வையாளர்களுக்கு ஒரு கவித்துவமான காதல் கதையைக் கொடுக்க விரும்பினோம்.
ஆனால், அவர்கள் எதிர்பாராத அளவுக்கு அன்பை இந்தப் படத்திற்குக் கொடுத்தனர். படத்திற்கான புரோமோ ஒன்றில் ஒரு ரசிகர் பதிவிட்ட கமெண்ட் ஒன்றை மறக்க மாட்டோம்.
96 படத்தில் இருந்து சில ப்ளூப்பர்களை கொடுங்கள். அப்போதுதான் ‘96’ ஒரு திரைப்படம் என்பதையே எங்களால் நம்பமுடியும்’ எனக் கூறியிருந்தார்.
Also Read : https://itamiltv.com/kilambakkam-bus-terminal-to-ease-the-hassle/
ஒரு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் படக்குழுவினருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?
இந்த காதலர் தினத்தில் தமிழகம் முழுவதும் 96 Movie அதிக திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.