boy shot the gun : பின்லாந்து பள்ளியில் 12 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பின்லாந்து நாட்டின் வான்டா நகரில் உள்ள பிரபலமான வீர்டோலா பள்ளியில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை 800 பேர் படிக்கின்றனர். ஆசிரியர்கள், பணியாளர்கள் என சுமார் 90 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை பள்ளி வளாகத்திற்குள் வைத்து 12 வயது சிறுவன் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை திடீரென எடுத்து அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சுட்டான்.
இதையும் படிங்க : கச்சத்தீவு : கை சேருமா? கனவாகுமா?
இந்த திடீர் துப்பாக்கி சூட்டால், குழந்தைகள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடியுள்ளனர்.
அப்போது துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் 2 குழந்தைகள் பலத்த காயமடைந்தன boy shot the gun.

இதுதொடர்பான தகவலில் அங்கு விரைந்த போலீசார், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய சிறுவனை கைது செய்து தங்களின் காவலில் வைத்துள்ளனர்.
சிறுவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினான் போன்ற விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
இதனிடையை பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த தகவலில் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்களது உறவினர்கள் மற்றும் பிற மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் பெட்டேரி ஓர்போ கூறி உள்ளார்.
இதையும் படிங்க : கனடாவை எட்டிய தமிழக திட்டம்.. ஸ்டாலின் சொல்வது எதை?