சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஹெர்போ கேர் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் நவீன் பாலாஜி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மருத்துவ குறிப்புகள் மற்றும் தீராத நோய்களுக்கு வர்மா, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகள் மூலம் மிகவும் பிரபலமானவர் டாக்டர் எஸ்.ஆர்.நவின்பாலாஜி.
அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் பழமையான மருத்துவ முறைகள் மூலம் நோய்களில் இருந்து விடுபடுவது குறித்து டாக்டர் எஸ்.ஆர்.நவின் பாலாஜி விளக்கி வந்தார்.
இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கபட்டு மருத்துவர் நவீன் பாலாஜி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் நவீன் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. ஈரோட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் நவீன் பாலாஜி அவர்களை இன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தேன் என்று குறிப்பிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைபடத்தில்,உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.