சென்னை ஆயிரம் விளக்கு பகுதி அருகே தனியார் நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆயிரம் விளக்கு பகுதியில் சிசிடிவி கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி கோபிநாத், சதீஷ் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் பரவியதை அடுத்து, தீ விபத்து குறித்து தீ அணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இதில் சிக்கியிருந்த இருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.