பின்லாந்த் நாட்டில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 86.69 மீட்டர் தூரம் எறிந்து சோப்ரா தங்கம் வென்றார்.
டிரினிடாட்&டொபாகோ வீரர் கேஷோர்ன் வால்காட், கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோரை எதிர்த்து நீரஜ் சோப்ரா 86.69 மீ எறிந்து அதைத் தொடர்ந்து இரண்டு முறை ஃபவுல் செய்தார்.
பின்னர் அவர் மீதமுள்ள மூன்று வீசுதல்களை முயற்சி செய்வதிலிருந்து விலகினார்.இந்த நிலையில் முதல் முயற்சியில் அவருக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் டோக்கியோவில் தங்கம் வென்ற பிறகு பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி வென்றதோடு புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார் .