மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் தில்லையாடியை சேர்ந்த கோபி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.இது குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடியில் 27 என்ற எண் கொண்ட அரசு பேருந்து பொறையாரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தில்லையாடி உத்திராபதியார் கோவில் தெருவை சேர்ந்த மளிகை கடை நடத்தி வரும் கோபி என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு இந்நிலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் பொறையார் போலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.