இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பும் போது 100 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தவரை ராணுவத்தினர் மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மகாராஷ்ட்ராவை சேர்ந்த சத்ய நாராயணன், குடும்பத்தினருடன் அமர்நாத் யாத்திரை சென்று குதிரை வண்டியில் திரும்பிய நிலையில், பிராரிமார்க் அருகில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.
இதில் நூறு அடி ஆழ பள்ளத்தில் சத்ய நாராயணன் தவறி விழுந்தார். தலையில் காயம் மற்றும் மார்பு பகுதியில் எலும்பு முறிவுடன் கிடந்த அவரை ராணுவத்தினர் மீட்டு, முதலுதவி அளித்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் இது தொடர்பாக ஜம்மு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.