அமெரிக்காவில் படகில் இருந்து ஆற்றில் கை கழுவிய நபரை சுறா (shark) ஒன்று இழுத்து செல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நேசனல் எவர்கிளேட்ஸ் என்ற பூங்காவில், மீனவரான நபர் ஒருவர் தனது நண்பர் மைக்கேல் ரஸ்சோ என்பவருடன் ஆற்றில் படகு சவாரி சென்றுள்ளார்.
அப்போது, படகில் இருந்தபடியே ஆற்று நீரில் கையை கழுவ அந்த நபர் முயன்றுள்ளார். ஆனால், உடனிருந்த அவரது நண்பர் மைக்கேல் ரஸ்சோ, ஆற்றில் சுறா (shark) மீன்கள் இருக்கும் எனவும், அதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தன் நண்பர் கூறியதை கேட்காமல் அந்த நபர் எச்சரிக்கையை மீறி ஆற்று நீருக்குள் கையை நனைத்து உள்ளார். அப்போது, அந்த பகுதியில் திடீரென வந்த சுறா ஒன்று அவரது கையை கடித்து ஆற்றுக்குள் இழுத்தது. இதனால், வலியால் அந்த நபர் அலறி துடித்து உள்ளார்.
அதையடுத்து, படகில் இருந்த அவரது நண்பர் உடனடியாக அவரை சுறா மீனிடமிருந்து மேலே இழுத்து காப்பாற்றினார். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய பூங்கா அதிகாரிகள் காயமடைந்த அந்த மீனவரை, உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதினார்.
மேலும், இந்த சம்பவத்தினை வீடியோவாக பதிவு செய்திருந்த அவர் அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
அந்த வீடியோவின் கீழ் இந்த சம்பவம் பயங்கர நாட்களில் ஒன்றாக இருந்தது என விவரித்து உள்ள அவர் பின்னர், தனது பதிவை அழித்து விட்டார்.
ஆனாலும், வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்து உள்ளனர் சமூக நல ஆர்வலர்கள்.
மேலும், இந்த சம்பவத்தின் போது அந்த ஆற்று நீரில் இரையோ அல்லது ரத்தமோ இல்லாதபோதும் சுறா மீன் தாக்கிய இந்த சம்பவம் நடந்து உள்ளது.
https://www.instagram.com/reel/Ct6ryQEsf1E/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==