இந்திய ட்ரோன் திருவிழாவை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.மோடியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் மற்றும் முன்னேற்றம் , டிரோன்களின் உதவியுடன் ஆய்வு செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் நாளையும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ரிமோட் மூலம் ட்ரோன் இயக்கும் பயிற்சி பெற்ற 150 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி ட்ரோன் பற்றிய ஆர்வம் இந்தியாவில் அதிகரித்து உள்ளதாகவும் , இந்த தொழில்நுடட்பத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாக இருக்கும் என தெரிவித்தார்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி வரை சென்று சேர்வதை இந்த துறை வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார் . மேலும் பாதுகாப்பு ,பேரிடர் மேலாண்மை காலங்களில் ட்ரோன் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார் .மேலும் இது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்த அவர்,
இந்தியாவில் இதுவரை 270ட்ரோன் நிறுவனங்கள் உள்ளதாகவும் ,மேலும் 2026 ஆம் ஆண்டிற்குள் 15,000 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்றும் முக்கிய அரணாக அமையும் என தெரிவித்துள்ளார்.