தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கி உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆ . ராசா நன்றி தெரிவித்தார்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ்:
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நலன் கருதி, நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் ரூ.14 இலட்சம் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்பை அரசே ஏற்க முடிவு செய்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மேற்காணும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடம்பெயர ஏதுவாக, முதலமைச்சர் அவர்கள் குடியிருப்புகளின் பயனாளிகள் பங்களிப்பாக ரூ.13.46 கோடியை ஒரு சிறப்பு நிகழ்வாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு தாங்கள் பெற்றுவரும் தினக்கூலி ரூ.375/-ஐ, திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியை,நாளொன்றுக்கு ரூ.438/- ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சருக்கு ஆ. ராசா அவர்களும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த முதலமைச்சர்ஸ்டாலின் தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.438/- வழங்கிடவும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, TANTEA தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கவும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ராசா சந்திப்பு:
இந்த நிலையில், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா நேரில் சந்தித்துதமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் மற்றும் தினமும் வழங்கப்படும் ஊதியத்தை 438 ரூபாயாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டமைக்காகவும் நன்றி தெரிவித்து, தான் எழுதிய பெரியார் அம்பேத்கர் – இன்றைய பொருத்தப்பாடு என்ற புத்தகத்தை வழங்கி சந்தித்து வாழ்த்து பெற்றார்.