சிங்கப்பூரில் சிவப்பு கண்கள் மற்றும் சாம்ல் வெள்ளி கலந்த உரோமங்களை கொண்ட சில்வர் லாங்கூர் வகை குரங்கு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் மட்டுமே இந்த வகை குரங்கு காணப்படும் என சிங்கப்பூர் தேசிய பூங்காக்கழகம் தெரிவித்துள்ளது.
கிளமெண்டி உட்ஸ் பூங்காவில் இந்த சில்வர் லாங்கூர் வகை குரங்கை கண்டதாக, அதனை புகைபடம் எடுத்து அவரது இஸ்டாவில் பதிவிட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த நபர் கூறியதாவது..
“பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்த போது, ‘ஏதோ உறுமும் சத்தம் கேட்டது. முதலில் காட்டுப்பன்றி என்று நினைத்த போது, அதை மரத்தில் கண்டவுடன் தான் குரங்கு என தெரியவந்தது” என்று கூறியுள்ளார்.
பொதுவாக புருணை, இந்தோனேசியா, மலேசியா ஆகியநாடுகளில் மட்டுமே இந்த வவகை சில்வர் லங்கூர் குரங்குகள் காணப்படும் என்றும், இவை சிங்கப்பூரில் இதுவரை இருந்ததில்லை என்றும் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து கூறிய சிங்கப்பூர் தேசியப் பூங்காக் கழகம்,
- சில்வர் லாங்கூர் வகை குரங்குகள் 46 செண்டிமீட்டர் முதல் 56 செண்டிமீட்டர் உயரம் வரை வளரும்.
- குரங்கின் வால் உடலை விட மிக நீளமாக வளரும்.
- இந்த குரங்குகள் பொதுவாக மனிதர்களை நெருங்காது என்றும், பொதுமக்களும் இந்த குரங்கை நெருங்க வேண்டாம்” எனவும் சிங்கப்பூர் தேசிய பூங்காக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைக்குக் புதிதாக வந்துள்ள இந்த சில்வர் லாங்கூர் வகை குரங்குகை தொடர்ந்து கண்காணிக்க இருப்பதாக தேசிய பூங்காக்க் கழகம் தெரிவித்துள்ளது.