உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் 26 வயது நிரம்பிய கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை பாதிப்பால் பார்வை குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு சிறப்பு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக குளித்து விளையாடும் வகையில் குளியல் தொட்டி அமைக்க அறநிலையத்துறை பரிந்துரையின் பேரில்,
கோயிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு யானை பராமரிக்கப்பட்டு வரும் யானை மஹால் பகுதியில் குளியல் தொட்டி அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டு இதற்காக 23.50 லட்சமும் ஒதுக்கப்பட்டு குளியல் தொட்டி அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கிறது.
தொடர்ந்து குளியல் தொட்டியில் யானை சிரமமின்றி இறங்க சாய்தளம் அமைப்பது போன்ற பணிகள் விரைந்து முடித்த பின்னர் பார்வதி யானையின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் உடல் உஷ்ணத்தை குறைத்து புத்துணர்வு பெரும் வகையில் குளியல் தொட்டி அமையும் என கூறப்படுகிறது.