பிரிட்டன் நாட்டில் ஒரு இளம் பெண் ஒருவருக்கு வந்துள்ள அரிய வகை நோய் (unable urinate) சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அவரை தவிக்க வைத்துள்ளது. பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் வசிக்கும் 30 வயது பெண் எல்லே ஆடம்ஸ் எந்த வித உடல்நலக்குறைவும் இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், 2020 அக்டோபர் மாதம் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவர் தூங்கியுள்ளார். மறு நாள் காலை எழுந்து கழிவறைக்கு சென்ற அவருக்கு சிறுநீர் வரவில்லை (unable urinate). சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவருக்கு சிறுநீர் வெளியேறாமல் இருந்துள்ளது. இதனால், பதற்றமடைந்த அவர் தண்ணீர் நிறைந்த நீர் ஆகாரங்களை அதிகம் குடித்துளார். ஆனாலும், அவரால் அன்று முழுவதும் சிறுநீர் கழிக்க முடியவில்லை.
இதனால், பதற்றமடைந்த அவர் அருகே உள்ள மருத்துமனைக்கு சென்றுள்ளார். அங்கு தனது பிரச்சனையை கூறிய பின்னர், அவரது சிறுநீர் பையில் சுமார் ஒரு லிட்டர் சிறுநீர் தேங்கி இருப்பதாக மருத்துவர்கள் பரிசோதித்து கூறியுள்ளனர்.
பொதுவாக, சராசரியாக ஒரு பெண்ணால் 500 மிலி சிறுநீர், ஆண் நபரால் 700 மிலி சிறுநீர் தான் அடக்கி வைக்க முடியும். ஆனால், இவருக்கு ஒரு லிட்டர் சிறுநீர் இருந்தும் அது வெளியேறாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து, உடனடியாக மருத்துவர்கள் டியூப் செலுத்தி செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றினர். மேலும், ஏதோ பதற்றம் காரணமாக தான் இந்த பிரச்சனை வந்துள்ளது எனவும் யோகா செய்து நன்கு தூங்கினால் இந்த பிரச்சனை சரியாகி விடும் எனவும் அந்த பெண்ணிடம் மருத்துவர்கள் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், எல்லேவுக்கு இந்த பிரச்சனை தீராத நிலையில், அன்று தொடங்கி ஒவ்வொரு முறையும் டியூப் கருவி மூலம் செயற்கை முறையில் தான் சிறுநீரை வெளியேற்றி வருகிறார்.
இப்படி ஓராண்டு கடந்த நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு Fowler’s syndrome என்ற அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டவர்களால் சிறுநீர் பை நிரம்பினாலும் இயற்கையாக சிறுநீர் கழிக்க முடியாது எனவும், அதிலும் குறிப்பாக இளம் பெண்களுக்கு தான் இந்த வகை அரிய நோய் வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த நோய்க்கான உரிய காரணம் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர், எல்லேவுக்கு catheter என்ற சிகிச்சை வழங்கப்பட்டு அதன் மூலமாக சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. catheter என்ற மருத்துவ முறைப்படி தனது சிறுநீரை வெளியேற்றி வரும் இவர் தற்போது Sacral Nerve Stimulation என்ற சிகிச்சையை பெற்று வருகிறார்.
இந்த சிகிச்சை இவரது பிரச்சனையை சற்று குறைத்து பாதிப்பை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆரம்ப காலத்தை விட சிகிச்சைக்குப் பின்னர், தற்போது முன்னேற்றம் இருக்கிறது என்று எல்லே நம்பிக்கை கொண்டுள்ளார்.