திருப்பதி லட்டுக்கு இனி ஆதார் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நடைபாதை வழியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வது வழக்கம்.
தினம்தோறும் ஏரளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என்று திருப்தி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
Also Read : ட்ரம்ப் கொலை முயற்சியில் வெளிநாடுகளின் சதி இல்லை – FBI தகவல்
இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு இனி ஆதார் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது . கூடுதல் லட்டு பெற வழக்கம்போல் ₹50 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.