அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த (Abi) அபி சித்தர் வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்றது . இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளிக்கும் இப்போட்டிக்கு 1200 காளைகளும், 700 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர் .
போட்டிக்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது.
இதையடுத்து மாடு பிடி வீரர்களுக்கு ருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,மூர்த்தி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர்.
இந்த மாபெரும் போட்டியில் வெற்றி பெறும் காளையின் உரிமையாளர், காளையருக்கு தலா ஓர் கார் பரிசாக வழங்கப்பட்டது .
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் 8 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்ற இப்போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 24 மாடுபிடி வீரர்கள், 9 மாடு உரிமையாளர்கள், 15 பார்வையாளர்கள், 3 காவலர்கள் உட்பட 52 பேர் காயமடைந்துள்ளனர்
அலங்காநல்லூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கண்டு ரசிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டது .
போட்டிகளில் பங்கேற்று காளைகளைப் பிடிக்கும் வீரருக்கும் பிடிபடாமல் செல்லும் காளையின் உரிமையாளருக்கும் பீரோ, கட்டில் , அண்டா, தங்க நாணயம், மின்விசிறி, கேஸ் ஸ்டவ், சைக்கிள், உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் வழங்கப்படும் காரை கருப்பாயூரணி கார்த்தி என்ற இளைஞர் வென்றார் .
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபல மாடு பிடி வீரர் (Abi) அபிசித்தர் இரண்டாம் இடம் பிடித்தார்.
அபிசித்தர் 2ஆம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் விதிமீறல் நடைபெற்றதாக குற்றம் சாட்டி அவர் பரிசு வாங்க வராமல் இருந்தார்.
இது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அபிசித்தர் 2ஆம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் விதிமீறல் நடைபெற்றதாக குற்றம் சாட்டி அவர் பரிசு வாங்க வராமல் இருந்தார்.
இது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து தற்போது பேட்டியளித்துள்ள அமைச்சர் மூர்த்தி கூறியதாவது :
விதிகளின் படியே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை.
Also Read : https://itamiltv.com/two-killed-in-sivaganga-jallikattu/
இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. விழா குழு முடிவின்படியே பரிசுகளை வழங்கியுள்ளோம். நாங்கள் யாரையும் ஏற்று இறக்கமாக பார்க்கவில்லை.
அனைத்து வீரர்களும் எங்களுக்கு சமம். தகுதியானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார் .