#BREAKING | அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம்-3 திரைப்படம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து பைரவா உள்ளிட்ட படங்கள் வெளியான போது தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை :
மேலும் பண்டிகை காலங்களில், புதிய படங்கள் வெளியாகும்போது, கூடுதலாக கட்டணம் தியேட்டர்களில் வசூலிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.