ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி. அவர்களுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையராக இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக இன்று பதவியேற்றுக்கொண்டார் .
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அருண் கூறியதாவது :
சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டறிவது, ரவுடிசத்தை கட்டுப்படுத்துவதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும்.
Also Read : தஞ்சை அருகே 22 கோடி மதிப்பிலான பழங்கால சாமி சிலைகள் மீட்பு..!!
சென்னை எனக்கு புதிதல்ல. ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் அதிகாரிகள் Professional Policing, Regular Policing பின்பற்றினாலே குற்றங்களை தடுக்கலாம்.
சென்னையில் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வரும் போக்குவரத்துகளில் உள்ள சிக்கல்களும் சரிசெய்யப்படும் என புதிதாக பொறுப்பேற்ற சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.