வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த மேக்கிங் வீடியோவில் படப்பிடிப்பில் அஜித் நடித்த காட்சிகளில் அவர் எதிர்கொண்ட கடினமான நடிப்பின் வெளிப்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.