புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ரசிகர்களின் கூட்டநெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் தற்போது சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் வெளியில் வந்துள்ளார்.
‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று முதல் காட்சியைக் காண திரையரங்கம் சென்ற அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் நேற்று தெலங்கானாவில் வைத்து போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர்.
Also Read : பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்..!!
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அன்றி மாலையே அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தற்போது சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் விடுவிக்கப்பட்டுள்ளார் . சிறையில் இருந்து வெளியில் வந்த நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :
கடந்த 20 ஆண்டுகளாக எனது திரைப்படம் வெளியாகும்போது திரையரங்கிற்கு செல்வது வழக்கம். இம்முறை துரதிர்ஷ்டவசமாக விபத்து நடந்துவிட்டது. இறந்தவர் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன். என்னை நினைத்து கவலைப்பட ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன் என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.