அலங்காநல்லூரில் (Alanganallur) நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர்கள் அருண் விஜய், சூரி மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோர் கண்டு களித்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
அதாவது பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் பண்டிகையான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நேற்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பிரபாகரன் என்ற மாடுபிடி வீரர் அதிக காளைகளை அடக்கி காரை பரிசாக தட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, அலங்காநல்லூரில் (Alanganallur) இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடிக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் பங்கேற்க சுமார் 1200 காளைகளும்,, 800 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் மாலை வரை 10 சுற்றுகள் ஆக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://x.com/ITamilTVNews/status/1747491783427408103?s=20
ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்குவர். அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வருகிறார்.
தங்க நாணயம் சைக்கிள் பீரோ கட்டில் மெத்தை பித்தளை பாத்திரங்கள் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இப்போட்டியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுளளனர்.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்த நடிகர்கள் அருண் விஜய், சூரி மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
இதனிடையே விழா மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நடிகர் அருண் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.