பிக் பாஸ் புகழ் அபிஷேக் ராஜா மற்றும் ஜிவி பிரகாஷ் காம்போவில் உருவாகியுள்ள புதிய படத்தின் 1st Look போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.
மக்கள் மத்தியில் செம பேமஸ் ஆன இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் இன்று தமிழ் திரையுலகின் முக்கிய அங்கமாக மாறி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற முகன் லொஸ்லியா சாண்டி தர்ஷன் கவின் உள்பட பலர் இன்று வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர் .
அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் அபிஷேக் ராஜா. இவர் அந்த சீசனில் பெரிதும் பேசப்பட்ட ஒரு போட்டியாளர் .
சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான இவர் பிக் வீட்டில் முதலில் 21 நாட்கள் வரை இருந்து மக்களால் வெளியேற்ட்டப்பட்டார் . பின்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மீண்டும் வந்து 63 ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் அபிஷேக் ராஜா இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் நம்ப ஜிவி பிரகாஷ் தான் நாயகனாக நடித்துள்ளார்.
’ஸ்டார்டா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் 1st Look போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது .
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் பால சாரங்கன் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/today-onwards-pongal-gift-distribution/
பிக் பாஸ் அபிஷேக் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் ஒரு பக்கம் ஜி வி அண்ணா நீங்க படத்தில் நடிப்பதை விட உங்கள் மியூசிக் தான எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு இன்னும் நேர மியூசிக் பண்ணுங்க என உரிமையுடன் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதோ அந்த 1st Look போஸ்டரை நீங்களும் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் ஷேர் செய்யுங்கள்.