பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம், மாடல் அழகியான தாரிணி காளிங்கரா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
காளிதாஸ் ஜெயராம் மலையாளத்தில் வெளிவந்த ‘கொச்சு கொச்சு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
2016ம் ஆண்டு வெளிவந்த மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜியில் தங்கம் என்ற திருநங்கை கேரக்டரில் நடித்த காளிதாஸ் அனைவராலும் புறப்பட்டார் .
காளிதாஸ் ஜெயராமின் காதலி தாரிணி பிரபல பிரிட்டன் மாடல். 2019ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற தாரிணி 2021ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.
இந்த நிலையில் தாரிணியும், காளிதாஸ் ஜெயராமும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தற்பொழுது காளிதாஸ் ஜெயராம், மாடல் அழகியான தாரிணியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.