கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் உலகம் முழுவதும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் அல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் இந்திய சினிமாவில் தனி இடம் பிடித்தது.இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தண்ணீரின் மேல் பரப்பில் நடிகர் கமல் உருவப்படத்தை 50 அடி உயரத்திலும் 30அடி நீளத்திலும் வரைந்து அசத்தி சாதனை படைத்துள்ளார்.
திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்தவர் டவன்ஸி சுரேஷ். இவர் பல பிரபலமான நபர்களின் படங்களை அடிக்கடி வரைந்து சாதனை செய்வது வழக்கம். இதை ஒட்டி நடிகர் கமல்ஹாசனின் உருவப்படத்தை தண்ணீரின் மேல் வரைய வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதையொட்டி மூணாறில் உள்ள ஒரு ஹோட்டலில் மூன்றாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தை தேர்வு செய்தார். தொடர்ந்து 2500 ஏ போர் பேப்பர் சீட் மற்றும் பள்ளிக்கூட சிறுவர்கள் படங்கள் வரைவதற்காக பயன்படுத்தும் படும் வர்ணங்களை பயன்படுத்தி அந்த நீச்சல் குளத்தில் மேற்பரப்பில் கமலஹாசன் படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தப் படம் 50 அடி உயரமும் 30 அடி நீளமும் கொன்றதாகும். இந்த படத்தை உருவாக்குவதற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டதாக சுரேஷ் தெரிவித்தார்.இருப்பினும் கமல் மீது கொண்ட அன்பால் தண்ணீரின் மேல் கமலின் தத்ரூபமான புகைப்படத்தை வரைந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.