புதிய படத்திற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வரும் நடிகர் சூர்யா கட்டுடன் மேனியில் சிக்ஸ்பேக் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது செம வைரல் ஆகி வருகிறது .
தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோல்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களுக்கு வேற லெவெலில் ட்ரீட் கொடுத்த சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் தாறுமாறாக உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாக்கி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, கோவை சரளா, நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
வரலாற்று கதைக்களம் கொண்ட இந்த படத்தில் போர் வீரனாக நடிக்கும் சூர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை மெருமேற்றி வருகிறார் . அந்தவகையில் சிக்ஸ்பேக் உடன் நடிகர் சூர்யா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இந்த தருமாறு போட்டோவை நீங்களும் பாருங்கள்…