தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா தமிழ்நாடு கிரிக்கெட் அணியை வங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற புதிய வகை 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த தொடருக்கான அணிகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில். அதன் உரிமையாளர்களின் விவரங்களும் வெளியாகி வருகின்றன .
அந்தவகையில் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக ராம்சரண் தேஜா, மும்பை அணியின் உரிமையாளராக அமிதாப்பச்சன், ஸ்ரீநகர் அணியின் உரிமையாளராக அக்ஷய குமார் மற்றும் பெங்களூர் அணியின் உரிமையாளராக ஹிருத்திக் ரோஷன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சென்னை அணியின் உரிமையாளராக தன்னை அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா கூறிருப்பதாவது :
வணக்கம் சென்னை! ISPLT10 இல் சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும், விளையாட்டுத்திறன் கொண்டவர்களுக்கும் கிரிக்கெட்டின் சிறந்து விளங்கும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவோம் என தனது ட்விட்டர் பதிவில் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரில் விளையாடப்போகும் சென்னை அணியை வங்கியுள்ளதாக அறிவித்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .