இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகி இன்று வெளியாகியுள்ளது ’கோப்ரா’.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படத்தின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.
‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.
‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் & முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி டிவிட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் இயக்குனர் அஜய் ஞானமுத்து, வினியோகஸ்தர்கள் மற்றும் சியான் விக்ரம் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விஜய் பற்றி விக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விக்ரம், “விஜய்யின் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பார். தொழில் ரீதியாக அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய நடனம் என்னை எப்போதும் கவர்ந்தது. அவர் தனது நடன அசைவுகள் எதையும் ஒத்திகை பார்ப்பதில்லை. அவர் எப்படி டான்ஸ் ஸ்டெப்ஸ்களை மட்டும் பார்த்துக் கொண்டு அதை எளிதாக ஆடுகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய்யுடன் கண்டிப்பாக ஒரு படத்தில் நடிப்பேன். இது ஒரு அற்புதமான யோசனை. அது நடைமுறைப்படுத்த வேண்டும். விஜய் பாணியில், I am Waiting!” என பேசினார்.
I like the sense of humour of @actorvijay ❤️ , He is so calm and Professionally he is a very good actor and a very big fan of Him ❤️🥰 – @chiyaan#ChiyaanVikram #Cobra #Varisu #Beast #Thalapathy67 pic.twitter.com/DDH70SnKN3
— Pokkiri Brothers Kerala (@pbkkerala) August 30, 2022