பிரபல நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானாதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் இந்த செய்திகளில் உண்மை இல்லை என கூறப்படுகிறது.
பெங்களூரில் பிறந்த திவ்யா ஸ்பாந்தனா(40) கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் நடிகையாக அறிவுகமானார். கன்னடத் திரையுலகின் பெரும் நடிகர்களுடன் நடித்த இவர், கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து ’கிரி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். குத்து’ ரம்யா என அறியப்பட்ட இவர் பின்னர் திவ்யா ஸ்பந்தனா என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
கன்னடத் திரையுலகில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்குப் திரைபடங்களிலும் நடித்து வந்த இவர், 2012ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2013 மண்டியா இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய இவர், 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் அணி மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவரானார்.
இந்த நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த திவ்யா ஸ்பந்தனா இன்று மாரடைப்பு காரணமாக காலமானார் என செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானாதாக வெளியாகிய செய்திகள் வதந்தி என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், பத்திரிக்கையாளர் சித்ரா என்பவர் இன்று காலை நடிகை திவ்யா ஸ்பந்தனாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில் நடிகை திவ்யாவிடம் இப்போது பேசினேன், அவர் நன்றாக உள்ளார் என கூறி உள்ளார்.