90களில் மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த நடிகை கனகா (actress kanaka). அவரைப்போல வேறு யாரும் உண்டா என்று யோசிக்கும் அளவிற்கு மலையாள சினிமாவிலும், தமிழிலும் கொடி கட்டி பறந்தார்.
பின்னாளில், சினிமாவை விட்டு காணாமல் போன நடிகை கனகாவை (actress kanaka) பற்றிய செய்திகள் மட்டுமே சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இந்நிலையில், நடிகை கனகா குறித்து வெளியான செய்திகளில் அவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், இதனால் போதைக்கு அடிமையாகி மனநோய் வரையில் கனகா சென்றதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதனை அடுத்து சமீபத்தில், நடிகை கனகாவின் வீடு தீப்பற்றி எரிந்தது பெரிய செய்தியாக சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், கனகாவை சந்தித்த ஊடகவியலாளர் ஒருவர் தனது அனுபவம் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதன்படி, சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டிற்குச் சென்றபோது, அவரது வீடு பூட்டி இருந்ததாகவும், வீட்டிற்குள் இருந்து கனகாவின் உரத்த பேச்சு சத்தம் மட்டுமே கேட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாகவே வர்ணம் பூசப்படாமல் இருந்த அவரின் வீட்டு நுழைவு வாயிலில் கனகா மற்றும் அவருடைய தாயாரின் பெயர்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கனகாவின் வீட்டை அடைந்தபோது அங்கு கனகா மொபைல் போனில் யாரிடமோ தமிழில் உரக்க பேசிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனகா வீட்டின் காலிங் பெல் கூட வேலை செய்யவில்லை எனவும், அவரது வீட்டின் ஓரத்தில் தூசு படிந்த கார்கள் மட்டுமே இருந்ததாகவும் அவரது வீட்டிற்கு காவலாளி கூட யாருமே கிடையாது என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் அவரது வீடு தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் பூஜை அறையில் ஏற்பட்ட தீ விபத்து எனவும் இந்த விபத்து கனகாவின் உதவியாளர் சபரிமலைக்கு சென்றபோது ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கனகா தனது நெருங்கிய உறவினர்களோடு இருக்கும் கருத்து வேறுபாட்டினால் யாருடனும் நெருங்கி பழகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கனகாவிற்கு எந்த உதவி வேண்டுமானாலும் தான் செய்ய தயாராக இருப்பதாகவும், சமீபத்தில் அவரது வீட்டிற்கு வர்ணம் பூசலாம் என்று கேட்டதற்கு கூட அவர் பின்னர் பார்க்கலாம் என்ற பதில் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நடிகை கனகாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், அவரை அவருடைய வாழ்க்கையை வாழ விடுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.