தனது கணவர் மரணம் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்” என நடிகை மீனா உருக்கமாக கூறியுள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28-ந் தேதி இரவு காலமானார். 48 வயதான இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். மீனாவின் குடும்பம் அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது இறுதி சடங்கு முடிந்ததும் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தனது கணவர் இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
”தன்னுடை அன்பிற்குரிய கணவர் இழப்பை நினைத்து மிகவும் சோகத்தில் இருக்கிறேன். ஊடகத்தினர் இந்த இக்கட்டான சூழலில், எனது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
தன் கணவர் உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு தவறான தகவல்களையும் பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்த கடினமான காலக்கட்டத்தில் எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் தனது கணவருக்காக பாடுபட்ட மருத்துவத்துறையினருக்கும், நம் முதல்வருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும், ராதாகிருஷ்ணன் IAS அவர்களுக்கும், என் நெருங்கிய நண்பர்களுக்கும், ஊடகத்துறையினர் மற்றும் பிரார்த்தனை செய்த அன்பிற்குரிய ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.