திரைத்துறையில் நுழைந்து, முதல் படத்திலேயே பிரபலமான நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி (Nikki Kalrani). ஜி.வி. பிரகாஷ் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’ திரைப்படத்தில் ஜி.வி.யின் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
தனது கொலு கொலு அழகு, சிறப்பான நடிப்பு, அளவான கவர்ச்சியால் ரசிகர்களை வசப்படுத்தியவர். இந்நிலையில், நிக்கி (Nikki Kalrani) தனது 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
மேலும், டார்லிங் திரைப்படத்தை தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்டசிவா கெட்ட சிவா, கோ 2 , கலகலப்பு 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ஆதியுடன் யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதனையடுத்து, இருவரும் இருவீட்டாரின் சம்மததோடு மார்ச் 2022ல் திருமணம் செய்து கொண்டனர். மேலும், திருமணத்திற்கு பிறகு நிக்கி கல்ராணி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது.
தொடர்ந்து, திருமணம் முடிந்த கையோடு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிக்கி கல்ராணி தற்போது “ஷிவுடு” எனும் தெலுங்கு திரைப்படத்திலும், “நிறங்கள் மூன்று வேண்டும்” என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நிக்கிகர்ப்பமாக இருக்கிறார் போன்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அந்த வதந்திகளுக்கு தயவு செய்து குழந்தை பிறப்பு செய்தியையும், எனக்கு சொல்லி விடுங்கள் என பதில் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கி கல்ராணி அவ்வபோது புகைப்படங்களை பகிர்ந்து வருவதன் மூலம் ரசிகர்களுடன் என்றும் டச்சில் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிக்கி கல்ராணிக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.