பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, ஜீன் குட்இனஃப் தம்பதியிருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தில் சே படத்தில், ஷாருக் கானுடன் நடித்திருந்தவர் நடிகை ப்ரீத்தி சிந்தா. அந்தப் படத்தில் ப்ரீத்தி நாயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த ப்ரீத்தி ஜிந்தா, ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜீன் குட்இனஃப் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் செய்து கொண்ட பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
தற்போது பிரீத்தி ஜிந்தாவிற்கு 46 வயதாகிறது. இந்நிலையில், அத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்த மகிழ்ச்சியான தகவலை ப்ரீத்தி ஜிந்தா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.