தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதாவின் மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது .அதன் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராதாவின் மூத்த மகளான கார்த்திகா 2009ம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான கார்த்திகா நாயர், பின்னர் தமிழில் கோ படத்தில் கதாநாயகியானார். ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த முதல் படம் வெற்றி பெற்றது.
அதன் பிறகு பொறம்போக்கு ,அன்னக்கொடி போன்ற சில படங்கள் மட்டுமே வெளிவந்தன. தான் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால்,திரையுலகில் இருந்து கார்த்திகா,விலகினார்.
இதனை தொடர்ந்து தந்தையின் தொழிலை கவனித்து வருகிறார்.கார்த்திகா நாயரும் ரோஹித்தை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
அண்மையில் கார்த்திகாவுக்கு ரோஹித் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள காவடியார் உடையபாலஸ் மாநாட்டு அரங்கில் நடிகையும், ராதாவின் மகளுமான கார்த்திகாவுக்கு இன்று கேரள பாரம்பரிய முறைப்படி இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமணத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, முதல் நடிகை ராதிகா, சுஹாசினி, ரேவதி, மேனகா, பாக்யராஜ்,
பூர்ணிமா, ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.