மறைத்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு நடிகர் ரம்பா கண்ணீர் மல்க அஞ்சலி (Actress Rambha) செலுத்தி உள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் முடிசூடா மன்னனாக கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே சோக கடலில் கரை சேர முடியாமல் தத்தளித்தது .
இதையடுத்து கேப்டனின் உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து டிசம்பர் 29 ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சட்டென கோபம் கொண்டாலும் குழந்தை சிரிப்புக்கு சொந்தக்காரரான கேப்டன் அவர்களின் மறைவுக்கு பின்
தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேப்டன் விஜயகாந்தின் ஆசை படி தனது கட்சி அலுவலகத்திற்குள் வரும் அனைவர்க்கும் தினம் தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா தனது குடும்பத்தோடு வந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உள்ளார்.
திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பா அவ்வப்போது தான் இந்தியா பக்கம் எட்டிப்பார்க்கிறார் .
இதனால் தற்போது கேப்டன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவரது நினைவிடத்திற்கு வருகை நடிகை ரம்பா கேப்டனுக்கு மனமுருக அஞ்சலி செலுத்தினார்.
Also Read : https://itamiltv.com/prohibition-on-involvement-of-children-in-election-campaigns/
இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகை ரம்பா, கலா மாஸ்டர் அவருக்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள கேப்டனின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது பிள்ளைகளிடம் ஆறுதல் கூறிய நடிகை ரம்பா கனத்த இதயத்துடன் (Actress Rambha) கண்ணீருடன் அங்கிருந்த்து புறப்பட்டார்.