நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (Deep Fake) வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.அந்த வீடியோவில், கருப்பு உடை அணிந்து நடிகை ராஷ்மிகா லிப்டுக்குள் நுழைகிறார்.
https://x.com/AbhishekSay/status/1721088692675072009?s=20
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும், இது போலியான வீடியோ என்றும், இந்த வைரல் வீடியோவில் இருப்பது ராஷ்மிகா இல்லை.
இது ஜாரா பட்டேலின் டீப்ஃபேக் வீடியோ என்று பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற டீப் ஃபேக் வீடியோவை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
https://x.com/SrBachchan/status/1721221116000366763?s=20
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, போலி விடியோவை பதிவிட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.