சின்னத்திரையில் நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரேகா நாயர்.
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற உலகிலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் நாண் லீனியர் படத்தில் நிர்வாணமாக நடித்து சர்ச்சைகளில் சிக்கினார் ரேகா நாயர்.
என்னதான் அவரது அந்த அரைநிர்வாண நடிப்பு சர்ச்சையாக வலம் வந்தாலும் ரேகா நாயர் எதை பற்றியும் கவலைப்படாமல் தன் மீது போர்தொடுத்த சர்ச்சை கேள்விகளுக்கு தைரியமாக பதில் கொடுத்து வந்தார் .ஆனால் சர்ச்சை கேள்விகளுக்கு பெயர் போன நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ரேகா நாயரை மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்.
இதையடுத்து திருவான்மியூரில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை நடுவழியில் வழிமறித்த நடிகை ரேகா நாயர் அவரை வாய்க்கு வந்தபடி கோபம்தீர கடுமையாக திட்டினார். நடுரோட்டில் நீண்ட நேரம் இருவரும் மாறிமாறி திட்டிக்கொண்டனர் . ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை தாக்கவும் செய்தார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தும் தனது துறை சார்ந்த நடிகர் நடிகைகள் மீது கூச்சமே இல்லாமல் தவறான கருத்துக்களை வெளியிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் குறித்து ரேகா நாயர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது காரணமே இல்லாமல் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் செத்தா நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். அன்று தான் எனக்கு தீபாவளி. நான் என் வாழ்க்கையில் பட்டாசு வெடிச்சதே இல்லை.
நரகாசூரன் செத்த நாளை தமிழர்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர் . என்னை பொறுத்தவரை என்னுடைய நரகாசூரன் பயில்வான் ரங்கநாதன் தான் என்று ஆவேசமாக பேசிருக்கிறார் ரேகா நாயர் .