தமிழ் சினிமாவில் விஷ்ணுவிஷால் ,சூரியின் அட்டகாசமான காம்போவில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து செம பாப்புலர் ஆனவர் தான் ரேஷ்மா. அந்த படத்தில் அவரது புஷ்பா புருஷன் காமெடி பட்டி தொட்டி எங்கும் வேற லெவெலில் ரீச் ஆகி இன்று வரை செம ட்ரெண்டாக வலம் வருகிறது .
இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த ரேஷ்மா தற்போது சின்னத்திரையில் கலக்கல் நாயகியாக வலம் வருகிறார் . பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற நெடுந்தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார் .
இந்த சீரியலில் ரேஷ்மாவின் நடிப்புக்கும் ராதிகா என்ற கதாபாத்திரத்திற்கும் அமோக வரவேற்பு வரவேற்பு இருந்து வருகிறது.
சீரியலில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் நடிகை ரேஷ்மா தற்போது ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல magazine ஒன்றின் விளம்பரத்திற்காக மாடல் உடன் ரேஷ்மா அப்படிநெருக்கமாக போஸ் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ரேஷ்மாவை கமெண்டில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சீரியலில் அவர் கணவராக வரும் கோபிக்கு துரோகம் பண்ணிடீங்களா என தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர் .