அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடனோ, அது இல்லாமலோ பரப்பினால், அதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என நடிகை சாய்பல்லவி காரசார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுவாக திரை பிரபலங்கள் என்றாலே அவர்கள் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் கிசுகிசுக்களும் விடாமல் போர் தொடுக்கும் அவற்றை சில பிரபலங்கள் கண்டுக்காமல் இருப்பார்கள் சிலர் விமர்சனங்களை எதிர்த்து குரல் கொடுப்பார்கள் .
அந்தவகையில் தற்போது தனியார் பத்திரிகை ஒன்று நடிகை சாய் பல்லவி மீது அண்மையில் ஒரு கிசுகிசு ஒன்றை போட்டுள்ளது . இது இணையத்தில் வைரலாக வலம் வரும் நிலையில் தற்போது தன் மீது எழுபட்ட கிசுகிசுக்களுக்கு எதிராக நடிகை சாய் பல்லவி கண்டன குரல் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நடிகை சாய்பல்லவி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடனோ, அது இல்லாமலோ பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் நான் அமைதியாக இருக்கவே விரும்புவேன்.
எனது அமைதியை பலமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து இவ்வாறு நடப்பதால், குறிப்பாக எனது படத்தின் வெளியீட்டின் போதோ, அறிவிப்புகள் வெளியாகும் சமயங்களிலோ இது போன்ற வதந்திகள் பரப்பப்படுவதால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.
அடுத்த முறை ஏதேனும் பிரபலமான இதழோ, பத்திரிக்கையோ, சமூக ஊடகங்களோ, தனிநபரோ, கிசுகிசு (அ) செய்தி என்ற பெயரில் தவறான தகவலை பரப்பினால், அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.