நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்த கடந்த சில நாட்களாக கோலிவூட் மற்றும் டோலிவூட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகர் நாக சைத்தன்யாவும், சமந்தாவும் இந்து மற்றும் கிறிஸ்தவமுறைப்படி கோவாவில் திருமணம் செய்துகொண்டனர்.
சுமார் 7 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டவிலையில், இருவருக்குமிடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்துள்ளதாக தெரிகிறது.
இருவரும் திருமண உறவை முறித்துக்கொள்ள நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்காததும், தி ஃபேமிலி மேன் என்ற வெப்சீரியசில் நடித்த சமந்தா, படுக்கையறை காட்சியில் படுமோசமாக நடித்ததும்தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தனது விவாகரத்து குறித்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினரிடையே பேசுபொருளாக மாறினார். இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்த செய்தி தேசிய அளவிலும், பேசுபொருளாக மாறியது. சமந்தாவுக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அவரது ரசிகர்கள் பலர் வைத்துவந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சமந்தாவுக்கு, 200 கோடி ரூபாய்வரை ஜீவனாம்சம் தருவதற்கு நடிகர் நாக சைத்தன்யாவின் குடும்பம் முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஜீவனாம்சத்தை சமந்தா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தான் நன்றாக சம்பாதிப்பதாகவும், தனக்கு எந்த தொகையும் வேண்டாம் எனவும் நடிகை சமந்தா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன