நடிகை சமந்தாவுக்கு விரைவில் இரண்டாம் திருமணம்..? மாப்பிள்ளை யார் தெரியுமா..

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா.தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்நது இவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது .

திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்த சமந்தா கடந்த சில வருடங்களாக பெரிய பட்ஜெட் படங்களில் கேமியோவாகவும் முகம் காட்டி வருகிறார் .

திரை வாழ்க்கையில் நடிகை சமந்தா வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும் இல்லற வாழ்க்கையில் சமந்தா எடுத்த முடிவு தற்போது வரை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .

கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டா சமந்தா கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய திருமணம் வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக ஷாக்கிங் அறிவிப்பை வெளியிட்டார்.

விவாகரத்திற்கு பின் நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் .

இந்நிலையில் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பல செய்திகள் இணையத்தில் உலா வந்தாலும் அவை அனைத்தும் வதந்திகளாகவே முடிகின்றன. அந்தவகையில் தற்போது வந்துள்ள சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்த செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக முன்னேறிக்கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் விரைவில் சமந்தா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஒருபக்கம் கிசுகிசுக்கப்படுகிறது.

குஷி படத்தில் இணைந்த நடித்தபோது இருவருக்குள் காதல் மலர்ந்ததாகவும் , விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது . ஆனால் இதுகுறித்து சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் வெளிவரவில்லை என்பதால் ஒரு வேளை இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

Total
0
Shares
Related Posts