சூது கவ்வும், கொள்ளைக்காரன்,என்னோடு விளையாடு, ரம், என்கிட்ட மோதாதே, ஏண்டா தலையில எண்ண வைக்கல, ஜானி, உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி.
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த இவர், தமிழ், கன்னடம், மலையாள மொழிகள் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி மாடலிங்கிலும் அதிகமாக இடம்பெற்று வந்த சஞ்சிதா,அவர் இருப்பதை போன்று ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையில் சிக்கினார்.
கடந்த 2009-ல் கடைசியாக கன்னட மொழியில் வெளியான bhaya.com என்ற படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வந்த சஞ்சிதா ஷெட்டி 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான `பத்மாஷ்’ என்ற படத்தில் நடித்தார்.
தற்போது தமிழில் படப்பிடிப்பில் இருக்கும் படங்களான பல்லு படாம பாத்துக்க, பகீரா, அழகிய கண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.