பிரபாஸ், க்ரித்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஐந்தாவது நாள் வசூல் வெளியாகியுள்ளது.
ஆதிபுருஷ் படம் வெளியானதில் இருந்து சமூகவலைதளங்களில் பொதுமக்கள் பலரும் படம் குறித்த விமர்சனங்களை அளித்து வருகின்றனர். படத்தைத் தடை செய்வது முதல் டிக்கெட் பணத்தைத் திரும்பக் கோருவது உள்ளிட்ட வலியுறுத்தி படத்தைத் தடை செய்ய பிரதமர் மோடிக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
படத்தின் கதை, நட்சத்திர நடிகர்கள் மற்றும் தோற்றம் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சில இடங்களில் ‘ஆதிபுருஷ்’ படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆதிபுருஷ் படத்தின் மோசமான வசனங்கள் மற்றும் மோசமான VFX ஆகியவற்றால் அதிகம் ட்ரோல் செய்யப்படுகிறது.
‘ஆதிபுருஷ்’ படம் வெளியான முதல் நாளில் எதிர்மறையான விமர்சனங்களைத் தாண்டி வசூலை வாரிக்குவித்தாலும், ஐந்தாவது நாள் வசூலில் எதிர்ப்பின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
5வது நாள் வசூல்:
முதல் நாளிலேயே ‘ஆதிபுருஷ்’ படம் அதிக வசூல் செய்திருந்தாலும், இரண்டாவது நாளில் படம் பிரமாதமாக காட்ட முடியவில்லை. ஹிந்தியில் 35 கோடி, தெலுங்கில் 50 கோடி, மலையாளத்தில் 0.4 கோடி, தமிழில் 0.7 கோடி, கன்னடத்தில் 0.4 கோடி என அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் சுமார் 90 கோடி வசூல் செய்துள்ளது ‘ஆதிபுருஷ்’. உலகம் முழுவதும் இப்படம் முதல் நாளில் 140 முதல் 150 கோடி வரை வசூல் செய்துள்ளது.
அதே சமயம் படம் 2வது நாளில் 65 கோடி வசூல் செய்துள்ளது. ‘ஆதிபுருஷ்’ படத்தின் மூன்றாவது நாளான வசூலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று ரூ.67 கோடி வசூல் செய்துள்ளது. ஐந்தாவது நாளான செவ்வாய்கிழமையன்று 10.80 கோடிகளை மட்டுமே வசூலித்த இப்படம்,அதன் பிறகு படத்தின் மொத்த வசூல் தற்போது ரூ.247.90 கோடியாக உயர்ந்துள்ளது.ஒட்டுமொத்தமாக ஆதிபுருஷ் திரைப்படம் 450 கோடியில் உருவாக்கபட்டது குறிப்பிடதக்கது.