ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமனு கேட்ட அதிமுக தொண்டரை விரட்டியடித்த கட்சியினர்..!

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமனு கேட்டு அதிமுக அலுவலகம் வந்த தொண்டர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான விருப்பமனுவை அதிமுக தலைமை தர மறுப்பதாக பேட்டியளித்த ஓமபொடி பிரசாத் சிங்கை திடீரென அதிமுகவினர் விரட்டியடித்தனர்.இதனால் அதிமுக அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

முன்னதாக இந்த தேர்தலை எதிர்த்து கே.சி. பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts