ராணிப்பேட்டையில் உள்ள 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் 120 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது அதிமுக
தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி, மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட 12,838 வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
பிப்.4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் நிலையில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள 8 பேரூராட்களில் போடியிடும் வேட்பாளர்கள் பெயரை அதிமுக வெளியிட்டுள்ளது.
அதன்படி, தக்கோலம், நெமிலி, பணப்பாக்கம், அம்மூர், விளாப்பாக்கம், திமிரி மற்றும் கலவை ஆகிய 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் 120 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டதில் மொத்தம் உள்ள 120 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது.