admk-dmdk allianceஅதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையேயான தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.
2024 மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் கடந்த 16ம் தேதி வெளியிட்டது.அதில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் (40) ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று (20ம் தேதி) தொடங்குகிறது. இதை முன்னிட்டு திமுக, அதிமுக ,பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் தொகுதி அறிவிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கூட்டணியை நம்பி அதிமுக இல்லை”- எடப்பாடி பழனிசாமி ‘நச்’ !
அந்த வகையில்admk-dmdk alliance அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.அதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநக உள்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளன.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று காலை வழங்கினார்.
முன்னதாக, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்தனர்.
அப்போது தேர்தல் ஒப்பந்தத்தில் இருவரும் பரஸ்பரம் கையெழுத்திட்டனர். இதையடுத்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையேயான தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.